Monday, January 14, 2013

Incredible India, Enchanting Tamilnadu - Part 2

தெருவில் உள்ள குப்பை தொட்டிகளை நீக்கி விட்டு  வீதிக்கு வரும் குப்பை வண்டியில் நேரடியாக போடும் திட்டம் கொயம்பதுரில் நன்றாக வேலை செய்கிறது . இதற்கு காரணம் அங்கு வீடுகள் ஒரு மாடிக்கு மேல் கட்ட கூடாது என்னும் சட்டம் இருப்பதாலும் மக்களின் நல்ளொழுக்கமும் தான் . சென்னையில் எங்கள் புரசைவக்கம் தெருக்களில் இது நடைமுறைக்கு சாத்தியம் ஆகாத ஒரு விஷயம் ஆகி விட்டது. இதனால் தெருக்கள் முன்பை விட குப்பையாகவும் அதை காலையில் வரும் வண்டி எடுபதற்குள் பல உயிரினங்களால் (மனிதன் உட்பட) கற்பழிக்க படுகிறது.

Volkswagen vento  கார்கள் சென்னை கோவை மற்றும் பெங்களூர் நகர்களில் எங்கு சென்றாலும் பார்த்தேன்.இந்த ஜேர்மன் கார்கள் செய்கிற manufacturing plant இந்தியாவில் இருந்தாலும் எல்லா  spare parts உம் கிடைக்காத பட்சத்தில் cost of ownership அதிகரிக்கும் . இது தெரியாமல் வாங்கும் கூட்டத்துக்கு ஒரு எச்சரிக்கை!

ஷீலா மீன் குழம்பு சாப்பிட்டேன் . இது வரை நான் சாப்பிட்டதில் இது தான் பெஸ்ட்.இது அமெரிக்காவில் கிடைக்குமா என்பதற்காக அதன் ஆங்கில பெயரை google செய்து Baricuda என்று தெரிந்து கொண்டேன். அடுத்து அந்த மீனுக்கு korean  மார்கெட்டில் வலை வீசி தேடவேண்டியது  தான். மீன் பெயர்களின் ஆங்கில பெயர்களை தெரிந்து கொண்டதில் ஒரு பயன் இருந்தது . நம்ம ஊரில் கிடைக்கும் கானங்கெலுதி , மத்தி , கிழங்கா மீன், நெத்திலி ,போத்தா மீன்கள் உடம்புக்கு மிகவும் நல்லது என்றும் தெரிந்து கொண்டேன் .

தொடரும்….

Breastfeeding Food Daily Checklist


Stick this in your refrigerator.

This is something I prepared for my wife based on the books I read. Just thought of sharing with others who are breast feeding.



Mom ! Please Eat For Me
1. Whole Grain Cereal
2. Yogurt
3. Banana,Kiwi
4. Pista/Almond/Walnut
5. Purple Grape Juice
6. Boiled Eggs
7. Garlic
8. Flax seeds
9. Coconut Oil/Milk
10. Fenugreek
11. Avocado Milkshake
12. Vitamin tablets

Thursday, January 10, 2013

Cinema, Fries, Latte : நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

 நடுவுல கொஞ்சம் ரீலை காணோம்னு "எடிட்டர்" சொல்லியிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருத்திருக்கும்.பாட்டு இல்லைனாலும் இரண்டரை மணி நேரம் படம் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைப்பார்கள் என்ற குறுகிய சிந்தனை கொண்ட தமிழ் திரை உலகினரே ! காசுகேற்ற பொழுதுபோக்கு "நேரம்" தேவை இல்லை "விஷயம்" தான் தேவை என்று புரிந்து கொள்ளுங்கள். உங்களை விட படித்தவர்கள் தான் இங்கு Majority.